ICC Champions Trophy 2025: இந்திய ரசிகர்களுக்காக புதிய அறிவிப்பை வெளியிட்ட பிசிபி தலைவர்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பும் இந்திய ரசிகர்களுக்கு உடனடியாக விசா வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி உறுதியளித்துள்ளார்.
எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
இதனால் இத்தொடரில் இந்திய அணி பங்கேற்குமா இல்லையா என்பது பெரும் விவாதங்களை எழுப்பி வருகிறது. ஏனெனில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்து வருவதுடன், இரு அணிகளும் இருதரப்பு தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறது. அதுமட்டுமின்று கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது, இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் இலங்கைக்கு மாற்றப்பட்டன.
Trending
இதனால் 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் இந்திய அணி இந்த ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்த விரும்பும் என்ற எதிர்பார்க்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பும் இந்திய ரசிகர்களுக்கு உடனடியாக விசா வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் இந்திய ரசிகர்களுக்கான டிக்கெட்டுகளில் சிறப்பு ஒதுக்கீட்டை வைத்திருப்போம், மேலும் போட்டியை காண பாகிஸ்தான் வரும் ரசிகர்களுக்கு உடனாடியாக விசா வழங்கல் கொள்கையை விரைவுபடுத்தவும் முயற்சிப்போம். இந்திய ரசிகர்கள் பாகிஸ்தானுக்கு வந்து லாகூரில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியைப் பார்க்க வேண்டும் என்று பிசிபி விரும்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக, பாதுகாப்பு காரணங்கள் கருதி இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட தயங்கும் பட்சத்தில்,போட்டி நாள்களில் பாகிஸ்தானில் விளையாடிவிட்டு மீண்டும் அதே நாளில் டெல்லி அல்லது சண்டீகருக்கு உடனே சென்றுவிடலாம். அதற்கேற்றவகையில் இந்திய அணியின் அனைத்து போட்டிகளையும் லாகூரில் நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் அதனை வலியுறுத்தி மொஹ்சின் நக்வி தற்போது இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now