உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐசிசி திட்டம்!
டி20 உலகக்கோப்பை தொடர்களில் மேலும் நான்கு அணிகளை இணைப்பது தொடர்பாக ஐசிசி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ICC Considering Big Expansion Plans For T20 World Cup (Image Source: Google)
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் டி20 உலகக்கோப்பை தொடரை நடத்த ஐசிசி திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்தியாவில் கரோனா பரவல் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்தாண்டும் உலக கோப்பை தொடரை வேறு நாட்டில் நடத்துவது குறித்தும் ஐசிசி ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்காக ஏற்கெனவே 16 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில், மேலும் நான்கு அணிகளை சேர்க்கலாம் என்று ஐசிசி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகளை கொண்டு போட்டிகளை நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News