ஸ்லோ ஓவர் ரேட் - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம்!
மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

மகளிர் உலகக்கோப்பை தொடரின் 12ஆவது சீசன் நியூசிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. மேலும் இந்திய அணி தரப்பில் இப்போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா ஆகியோர் சதம் விளாசியும் அசத்தினர்.
இந்நிலையில் இப்போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு போட்டி கட்டணத்திலிருந்து 40 விழுக்காடு அபராதமாக விதித்து ஐசிசி உத்திரவிட்டுள்ளது.
மேலும் வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 20 விழுக்காடு அபராதமும் விதித்து ஐசிசி உத்திரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now