
பிசிசிஐ, அடுத்த 5 ஆண்டுகளான ஐபிஎல் போட்டிகளை 4 பேக்கஜ்களாக விற்றது. இதன் மூலம் இந்திய தொலைக்காட்சி உரிமையை ஸ்டார் நிறுவனமும். இந்திய டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனமும், உலக நாடுகளின் ஒளிபரப்பு உரிமையை டைம்ஸ் மற்றும் வியாகாம் நிறுவனமும் ஏலத்தில் எடுத்தது.
இதன் மூலம் பிசிசிஐ 48,070 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. தற்போது ஐசிசியும் அடுத்த 8 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் போட்டிகளுக்கான உரிமையை ஒப்பந்தம் மூலம் விற்க உள்ளது. கடந்த முறை ஒட்டுமொத்தமாக குளோபல் ரைட்ஸ் என்ற பெயரில் 8 ஆண்டுகளுக்கு ஸ்டார் நிறுவனத்திற்கு ஐசிசி விற்றது.
தற்போது, பிசிசிஐ போல் வருமானத்தை பெருக்க முடிவு எடுத்துள்ள ஐசிசி, இந்தியாவில் மட்டும் ஐசிசி போட்டிகளை தனியாக விற்க முடிவு எடுத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு பகுதிக்கும் தனி உரிமை என்ற வகையில் ஐசிசி விற்க உள்ளது. மேலும், ஆடவர் , பெண்களுக்கு என போட்டிகளுக்கான உரிமங்களை தனியாக விற்கவும் முடிவு எடுத்துள்ளது.