
ICC men's white-ball events from 2024-2031 (Image Source: Google)
2021 டி20 உலகக் கோப்பை தொடருக்கு அடுத்ததாக 2022 டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவிலும், 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைப் தொடரும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் 2024-31 காலகட்டத்தில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை தொடர்கள் குறித்த விவரங்களை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
இதில் 2024-31 காலகட்டத்தில் 2 ஒருநாள் உலகக் கோப்பை, 4 டி20 உலகக் கோப்பை, 2 சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி 2026 டி20 உலகக் கோப்பை, 2029 சாம்பியன்ஸ் கோப்பை, 2031 ஒருநாள் உலகக் கோப்பை ஆகிய தொடர்கள் இந்தியாவில் நடைபெறவுள்ளன.