ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியா vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதையடுத்து மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
இதில் அரையிறுதிக்கு முன்னேற நியூசிலாந்துக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் ஒரு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது. அதேவேளையில் நாளைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளிக்க வங்காளதேசம் கடுமையாக போராடும்.
Trending
இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. மேலும் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் காயம் காரணமாக விலகி உள்ளாதால் துணை கேப்டன் ஷாண்டோ நாளைய ஆட்டத்தில் கேப்டனாக செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs வங்கதேசம்
- இடம் - மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம், புனே
- நேரம் - காலை 10 மணி (GMT 0500)
பிட்ச் ரிப்போர்ட்
புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம் அதிக ஸ்கோர் எடுக்கும் மைதானமாகவே உள்ளது. இங்கு எப்போது பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கு விக்கெட்டுகளை வீழ்த்துவதில் முன்னோக்கி இருந்திருக்கலாம் ஆனால் இன்று ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த மைதானத்தில் டாஸ் எந்த முக்கிய பங்கையும் வகிக்கவில்லை. எனவே, டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம், சேஸிங் செய்வது இந்த பிட்சில் ஈஸியாக இருக்கும்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 21
- ஆஸ்திரேலியா - 19
- வங்கதேசம் - 01
- முடிவில்லை - 01
உத்தேச லெவன்
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கே), ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹசில்வுட்.
வங்கதேசம்: தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், நஸ்முல் ஹுசைன் சாண்டோ (கே), மஹ்முதுல்லா ரியாத், மெஹதி ஹசன் மிராஸ், முஷ்பிக்கூர் ரஹீம், தஹித் ஹிரிடோய், மெஹதி ஹசன், தன்ஸிம் ஹசன் ஷாகிப், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - லிட்டன் தாஸ்
- பேட்ஸ்மேன்கள் - டேவிட் வார்னர் (கேப்டன்), மஹ்முதுல்லா ரியாத், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசேன்
- ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், மெஹ்தி ஹசன் மிராஜ் (துணை கேப்டன்)
- பந்துவீச்சாளர்கள்- ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஷோரிஃபுல் இஸ்லாம்
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now