
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைப்பெறும் ஆட்டத்தில் 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியா நெதர்லாந்தை சந்திக்க உள்ளது. முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா அடுத்த இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.
நாளை நடைபெறும் ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலியா உள்ளது. அதேவேளையில் தங்களது முதல் இரு லீக் ஆட்டங்களில் தோல்வி அடைந்த நெதர்லாந்து 3வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது. இதையடுத்து 4ஆவது ஆட்டத்தில் தோல்வி கண்ட நெதர்லாந்து தங்களது 2ஆவது வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. இதனால் இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து
- இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
- நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)