ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை பெங்களூருவிலுள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் நேருக்கு நேர் மோதவுள்ளன. நடப்பு உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளாக பார்க்கப்பட்ட இரு அணிகளும் நேருக்கு நேர மோதவுள்ளதால இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்
- இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரூ
- நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)
போட்டி முன்னோட்டம்
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய நடப்பு உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்து இரண்டு அதிர்ச்சி தோல்விகளை கொடுத்த நிலையில், இலங்கை அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் தங்களது திறனை வெளிக்காட்ட தொடங்கியுள்ளது. இருப்பினும் அந்த அணியின் பேட்டிங்கில் ஸ்டீவ் ஸ்மித் இன்னும் தனது ஃபார்முக்கு வராதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் பேட்டிங்கில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், மார்னஸ் லபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ் என அதிரடி பட்டாளமே உள்ளது. பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட், பாட் கம்மின்ஸ் ஆகியோருடன் ஆடம் ஸாம்பா, கிளென் மேக்ஸ்வெல், ஸ்டொய்னிஸ் இருப்பதால் நிச்சயம் அந்த அணி வெற்றிகாக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதலிரண்டு போட்டிகளில் வெற்றியை ஈட்டிய நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் அணியின் முக்கிய வீரர்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபிக், வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் விளையாடுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பேட்டிங்கில் கேப்டன் பாபர் ஆசாமின் ஃபார்ம் கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும் முகமது ரிஸ்வான், இஃப்திகார் அகமது, சௌத் சகீப் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் ஹாரிஸ் ராவுஃப், ஹசன் அலி, முகமது நவாஸ் ஆகியோர் எதிரணிக்கு சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்ச் ரிப்போர்ட்
பெங்களூரு சின்னசாமி மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்கள் ரன்களை குவிக்க ஏதுவாகவும், பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அங்கு டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 107
- ஆஸ்திரேலியா - 69
- பாகிஸ்தான் - 34
- முடிவில்லை - 04
உத்தேச லெவன்
பாகிஸ்தான்: அப்துல்லா ஷஃபிக், இமாம் உல் ஹக், பாபர் ஆசாம் (கே), முகமது ரிஸ்வான், சௌத் ஷகீல், இஃப்திகார் அஹ்மது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப்.
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கே), ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான், ஜோஷ் இங்கிலிஸ்
- பேட்ஸ்மேன்கள்- டேவிட் வார்னர், மார்னஸ் லாபுஷாக்னே
- ஆல்ரவுண்டர் - கிளென் மேக்ஸ்வெல் (துணை கேப்டன்), இஃப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ்
- பந்துவீச்சாளர்கள்- மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா (கேப்டன்), ஷஹீன் அஃப்ரிடி
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now