ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடவுள்ளன.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.இதில் இந்திய அணி மட்டும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. மீதமுள்ள 3 அரையிறுதி இடத்திற்கு மற்ற அணிகள் போட்டியிட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி அரையிறுதிக்கான வாய்ப்பிலிருந்து வெளியேறிய நிலையில், ஆறுதல் வெற்றியையாவது பதிவுசெய்யும் நோக்குடன் நாளைய போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
- இடம் - நரேந்திர மோடி மைதானம், அஹ்மதாபாத்
- நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)
பிட்ச் ரிப்போர்ட்
நரேந்திர மோடி மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அங்கு சுழற் பந்துவீச்சாளர்களும் இந்த ஆடுகளத்தில் தங்களுடைய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். எனினும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இந்த ஆடுகளத்தில் அவர்கள் செயல்பட வேண்டும். அதேபோன்று வேகப்பந்துவீச்சாளர்களும் அதிகளவு ரன்கள் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் பந்து பேட்டிற்கு நன்றாக வரும் என்பதால் நாளை ஆட்டத்தில் ரன் விருந்தை எதிர்பார்க்கலாம். இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசுவது சிறப்பாக இருக்கும்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் – 155
- இங்கிலாந்து - 63
- ஆஸ்திரேலியா - 87
- முடிவில்லை - 05
உத்தேச லெவன்
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கே), மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, ஆதில் ரஷித், மார்க் வுட்.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹசில்வுட்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - ஜானி பேர்ஸ்டோவ்
- பேட்ஸ்மேன்கள் - டேவிட் வார்னர் (கேப்டன்), ஜோ ரூட், டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்)
- ஆல்ரவுண்டர் - டேவிட் வில்லி, கேமரூன் கிரீன்
- பந்துவீச்சாளர்கள்- அடில் ரஷித், ஜோஷ் ஹசில்வுட், மிட்செல் ஸ்டார்க், கிறிஸ் வோக்ஸ், ஆடம் ஸாம்பா
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now