Advertisement

ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இலங்கை அணி விளையாடவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 25, 2023 • 17:18 PM
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
Advertisement

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன் இலங்கையை பெங்களூருவில் சந்திக்க உள்ளது. இரு அணிகளும் தலா 4 ஆட்டங்களில் விளையாடி 1 வெற்றி, 3 தோல்வி கண்டு 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8 மற்றும் 9ஆவது இடத்தில் உள்ளன.

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs இலங்கை
  • இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)

போட்டி முன்னோட்டம்

நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இந்த உலகக்கோப்பை தொடர் பெரிதளவில் கைகொடுக்கவில்லை. இதுவரை 4 போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து அணியானது வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் மட்டுமே வெற்றியைப் பதிவுசெய்து, புள்ளிப்பட்டியளின் 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இனி வரும் போட்டிகளில் அந்த அணி அபார வெற்றிகளைப் பதிவுசெய்தால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறமுடியும்.

அணியின் பேட்டிங் ஆர்டரில் ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி ப்ரூக் என அதிரடி பட்டாளம் இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து சொதப்புவதே தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் டேவிட் வில்லி, மார்க் வுட், சாம் கரண், ஆதில் ரஷித் உள்ளிட்டோரும் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். இதனால் இனி வரும் போட்டிகளில் தவறுகளை திருத்தி இங்கிலாந்து அணி வெற்றி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணிக்கு இத்தொடர் இதுவரை சரிவர அமையவில்லை. அந்த அணியும் நடப்பு உலகக்கோப்பை தொடரில் விளையாடிய 4 போட்டிகளில் மூன்று தோல்வியைத் தழுவியுள்ளது. அதுமாட்டுமின்றி அணியின் கேப்டன் தசுன் ஷனகா, மதீஷா பதிரான ஆகியோர் காயம் காரணமாக அடுத்தடுத்து தொடரிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

இருப்பினும் அனுபவ வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் அணியில் இடம்பிடித்துள்ளது அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. அவருடன் குசால் பெரேரா, குசால் மெண்டிஸ், பதும் நிஷங்கா, தனஞ்செயா டி சில்வா, சரித் அசலங்கா ஆகியோர் பேட்டிங்கிலும், மகேஷ் தீக்‌ஷனா, தில்ஷன் மதுஷங்கா, கசுன் ரஜித் ஆகியோர் பந்துவீச்சிலும் இருப்பது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. இதனால் நாளை போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்

பெங்களூரு சின்னசாமி மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்கள் ரன்களை குவிக்க ஏதுவாகவும், பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அங்கு டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 78
  • இங்கிலாந்து - 38
  • இலங்கை - 36
  • முடிவில்லாதது - 04

உத்தேச லெவன்

இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கே), சாம் கரன், டேவிட் வில்லி, ஆதில் ரஷித், கஸ் அட்கின்சன், மார்க் வுட்.

இலங்கை: பதும் நிஷங்கா, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கே), சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்சய் டி சில்வா, துஷான் ஹேமந்த, சமிக கருணாரத்னே, மகேஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, தில்ஷன் மதுஷங்க.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - ஜானி பேர்ஸ்டோவ், குசல் மெண்டிஸ் (கேப்டன்), சதீர சமரவிக்ரம
  • பேட்ஸ்மேன்கள்- குசல் பெரேரா, ஜோ ரூட், டேவிட் மாலன் (துணை கேப்டன்), பதும் நிஸ்ஸங்க
  • ஆல்ரவுண்டர் - டேவிட் வில்லி
  • பந்துவீச்சாளர்கள்- மார்க் வுட், கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement