
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் இன்று புனேவில் நடைபெற்றுவரும் 17ஆவது லீக் போட்டியில் வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வங்கதேசம் எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
அதை தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய வங்கதேசத்துக்கு லிட்டன் தாஸ் மற்றும் தன்சித் ஹாசன் ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினார்கள். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் 51 ரன்கள் எடுத்திருந்த தன்ஸித் ஹசன் 51 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் மெஹதி ஹசன் மிராஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த லிட்டன் தாஸ் 7 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த தாஹித் ஹிரிடோயும் 16 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.