
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விருந்து படைத்துவருகிறது. இதில் 2011 போல சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.
இந்நிலையில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs ஆஃப்கானிஸ்தான்
- இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
- நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)