ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs இங்கிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 29ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐசிசி நடத்தும் 13ஆவது உலக கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, இந்தியா, அஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்நிலையில், இத்தொடரில் நாளை நடைபெறும் 29ஆவது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளதால் அதனை தடுக்கும் முயற்சியில் இங்கிலாந்து அணி நாளை விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs இங்கிலாந்து
- இடம் - ஏக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
- நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)
போட்டி முன்னோட்டம்
நடப்பும் உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பதிவுசெய்து அரையிறுதி வாய்ப்பை ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது. இதனால் எஞ்சியுள்ள போட்டியில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கும் முனைப்பில் இந்திய அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் பேட்டிங்கைப் பறுத்தமட்டில் தொடக்க வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துவருகின்றனர். அவர்களுடன் முன்னாள் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து தனது அபார ஆட்டத்தின் மூலமாக ரன்களை குவித்து வருவது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோரும் இக்கட்டான நேரங்களில் கைடுத்துவருகின்றன. பந்துவீச்சில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டுவருகின்றன. அவர்களுடன் கடந்த போட்டியில் விளையாடிய முகமது ஷமியும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளது இந்திய அணிக்கு மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
மறுப்பக்கம் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்து அரையிறுதிக்கான வாய்ப்பை ஏறத்தாழ இழந்து தடுமாறி வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருத்தப்பட்ட இங்கிலாந்து அணியின் செயல்பாடுகள் அனைவரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட வீரர்கள் தொடர்ந்து சொதப்பியதே அந்த அணியின் படுதோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. அதிலும் இலங்கை அணிக்கெதிரான போட்டியில் வெறும் 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
பந்துவீச்சில் மார்க் வுட், சாம் கரண், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, ஆதில் ரஷித் ஆகியோரும் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கியது அணியின் பந்துவீச்சு துறையை பலவீன படுத்தியது. இதனால் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆறுதல் வெற்றியையாவது தேடும் முனைப்பில் இங்கிலாந்து அணி நாளைய போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
பிட்ச் ரிப்போர்ட்
ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்த ஏக்னா கிரிக்கெட் மைதானம் தற்போது பேட்டர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் மற்றப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவதையே தீர்மானிக்கும் என கணிக்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 106
- இந்தியா - 57
- இங்கிலாந்து - 44
- முடிவில்லை - 03
- டை - 02
உத்தேச லெவன்
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வுட்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - ஜானி பேர்ஸ்டோவ், கேஎல் ராகுல்
- பேட்ஸ்மேன்கள்- ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ஜோ ரூட், ஷுப்மான் கில்
- ஆல்ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா, டேவிட் வில்லி
- பந்துவீச்சாளர்கள்- அடில் ரஷித், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now