Advertisement
Advertisement
Advertisement

ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 21, 2023 • 20:05 PM
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
Advertisement

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியையே சந்திக்காத இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தங்களது வெற்றி கணக்கு தொடரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - இந்தியா vs நியூசிலாந்து
  • இடம் - ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானம், தர்மசாலா
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து நான்கு வெற்றிகளைப் பதிவுசெய்து அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல் என அனைவரும் சிறப்பான ஃபார்மில் அசத்தி வருகின்றன.

மாறுபக்கம் பந்துவீச்சில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பேட்டர்களுக்கு கடும சவாலாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா காயமடைந்துள்ளதால் அவரால் இப்போட்டியில் விளையாடமுடியாது என்பது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம் வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூரும் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவருடைய இடமும் சிக்கலாகியுள்ளது. இதனால் நாளைய போட்டியில் முகமது ஷமி அல்லது ரவிச்சந்திர அஸ்வின் மற்றும் சூர்யகுமார் யாதவிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மறுபக்கம் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் நடப்பு உலகக்கோப்பை தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன் ரன் ரேட் அடிப்படையில் புள்ள்ப்பட்டியளிலும் முதலிடத்தில் நீடித்து வருகிறது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய நிலையில் காயம் காரணமாக விளையாடமுடியாதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் பேட்டிங்கில் டெவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலீப்ஸ், டெரில் மிட்செல், டாம் லேதம் என மிக நீண்ட வரிசையைக் கொண்டுள்ளனர். அதேபோல் பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட், மேட் ஹென்றி, லோக்கி ஃபர்குசன் ஆகியோருடன் மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி போன்று திறமையான சுழற்பந்துவீச்சாளர்களும் இருப்பதால் நிச்சயம் இந்திய அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிட்ச் ரிப்போர்ட் 

தரம்சாலா மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இங்கு குளிரான மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவும் என்பதால் ஸ்விங் பவுலர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். எனவே சூழ்நிலைகளை உணர்ந்து பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடினால் எளிதாக பெரிய ரன்களையும் குவிக்கலாம். அதே சமயம் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் முக்கிய விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள். எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் எடுப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் – 116
  • இந்தியா - 58
  • நியூசிலாந்து - 50
  • முடிவில்லை  - 08

உத்தேச லெவன்

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

நியூசிலாந்து: டெவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மேட் ஹென்றி, லோக்கி ஃபெர்குசன், டிரென்ட் போல்ட்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - கேஎல் ராகுல், டெவோன் கான்வே
  • பேட்ஸ்மேன்கள்- விராட் கோலி (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், ஷுப்மான் கில்
  • ஆல்-ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திர (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்- டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, மேட் ஹென்றி

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement