Advertisement

ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs நியூசிலாந்து, அரையிறுதி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan November 14, 2023 • 13:53 PM
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs நியூசிலாந்து, அரையிறுதி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs நியூசிலாந்து, அரையிறுதி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப (Image Source: CricketNmore)
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் லீக் சுற்றில் விளையாடிய 9 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா புள்ளிப்பட்டியல் முதலிடம் பிடித்தது. இதைத்தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்த நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா விளையாட உள்ளது. அதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து 2019 போல இந்தியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு செல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. 

மறுபுறம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வென்று வரும் இந்தியா ஐசிசி தொடர்களில் பெரும்பாலும் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளது. ஆனாலும் தற்போது அனைத்து வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால் இதே தொடரில் லீக் சுற்றில் 20 வருடங்கள் கழித்து ஐசிசி தொடரில் நியூஸிலாந்தை தோற்கடித்தது போல இம்முறையும் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற போராட தயாராகியுள்ளது.

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs நியூசிலாந்து
  • இடம் - வான்கடே கிரிக்கெட் மைதானம், மும்பை
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)

போட்டி முன்னோட்டம்

நியூசிலாந்துக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவது மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. டெவான் கான்வே நிதானமாக விளையாடும் நிலையில் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடுவதால் நியூசிலாந்தின் ஓப்பனிங் ஜோடி வலுவாகவே இருக்கிறது. அவர்களைத் தொடர்ந்து டார்ல் மிட்சேல் மிடில் ஆர்டரில் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடும் திறமையை கொண்டிருக்கும் நிலையில் டாம் லாதம் மற்றும் மார்க் சேப்மேன் ஆகியோர் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதது நியூசிலாந்துக்கு பின்னடைவாக அமைகிறது.

இருப்பினும் கிளன் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி ஃபினிஷிங் செய்யும் திறமையுடன் பகுதி நேர பவுலராக மாறி முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அச்சுறுத்தலை கொடுத்து வருகிறார். மேலும் மிட்சேல் சான்ட்னர் கிட்டத்தட்ட இந்தியாவின் ஜடேஜாவை போல சுழல் பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் ஜிம்மி நீசம் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக வெற்றிக்கு போராட தயாராக இருக்கிறார். அதே போல வேகத்தில் ட்ரெண்ட் போல்ட் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எப்போதுமே சவாலை கொடுப்பவராக இருக்கும் நிலையில் லாக்கி பெர்குசன் மற்றும் டிம் சவுதி ஆகியோரும் நல்ல தரமும் அனுபவமும் கொண்டுள்ளனர். 

மறுபுறம் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாடிய அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளில் முதலிடம் பிடித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில் ஷுப்மன் கில் – ரோஹித் சர்மா ஆகியோர் நல்ல ஃபார்மில் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்கும் ஓப்பனிங் ஜோடியாக மிரட்டுகின்றனர்.

குறிப்பாக ரோஹித் சர்மா வெற்றிக்காக பவர் பிளே ஓவர்களில் அடித்து நொறுக்கும் நிலையில் விராட் கோலி ஓப்பனிங் மற்றும் மிடில் ஆர்டரை இணைக்கும் பாலமாக இந்தியாவின் வெற்றி நாயகனாக போராட தயாராக இருக்கிறார். அவர்களை தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் கடந்த போட்டியில் 208 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல ஃபார்மில் மிடில் ஆர்டரில் வலுசேர்க்கிறார்கள்.

அதை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் ஃபினிஷிங் செய்து தம்முடைய தரத்தை நிரூபிக்க காத்திருக்கும் நிலையில் ரவீந்திர ஜடேஜா ஆல் ரவுண்டராக எதிரணிக்கும் இந்தியாவுக்கும் குறுக்கே நிற்பார் என்று நம்பலாம். அதே போல குல்தீப் யாதவ் ஸ்பின்னராக மாயாஜாலம் நிகழ்த்தி வரும் நிலையில் முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இந்த உலகக்கோப்பையில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியாக எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்டு வெற்றிக்கு போராட தயாராகியுள்ளனர்.

எனவே தொடர்ந்து 9 போட்டிகளில் வென்றதைப் போல சொந்த மண்ணில் வலுவாக இருக்கும் இந்தியா இப்போட்டியிலும் நியூசிலாந்தை தோற்கடிக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழக்காமல் முக்கிய கேட்ச்களை தவிரவிடாமல் இந்திய அணியினர் சிறப்பாக செயல்படுவது அவசியமாகும்.

பிட்ச் ரிப்போர்ட்

மும்பை வான்கடே மைதானத்தில் இருக்கும் பிட்ச் பிளாட்டாக இருப்பதால் டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிந்து வருகிறார்கள். கிட்டத்தட்ட அதே போலவே ஒருநாள் போட்டிகளிலும் இங்கு பிளாட்டான பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த மைதானத்தின் பவுண்டரி எல்லைகளும் சிறியதாகவே உள்ளது.  

அதனால் கால சூழ்நிலையில் புரிந்து நன்கு செட்டிலாகும் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்களை அடிக்கலாம். இருப்பினும் ஆரம்பகட்ட புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. மேலும் இது பகலிரவு போட்டியாக நடைபெறுவதாலும் டாஸ் வெல்லும் கேப்டன் பந்துவீச்ச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.

வானிலை நிலவரம்

நவம்பர் 15ஆம் தேதி மும்பை நகரில் மழை பெய்வதற்கான வாய்ப்பு 10% க்கும் குறைவாக இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 117
  • இந்தியா - 59
  • நியூசிலாந்து - 50
  • முடிவில்லை - 08

உத்தேச லெவன்

இந்தியா: ரோஹித் சர்மா (கே), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

நியூசிலாந்து: டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கே), டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், டிம் சௌதீ, லோக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர் - கேஎல் ராகுல்
  • பேட்ஸ்மேன்கள்- விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், டேரில் மிட்செல்
  • ஆல்ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), மிட்செல் சான்ட்னர், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்- டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement