Advertisement
Advertisement
Advertisement

ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs பாகிஸ்தான்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி நாளை அஹ்மதாபாத்தில் நடைபெறுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 13, 2023 • 14:30 PM
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs பாகிஸ்தான்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs பாகிஸ்தான்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
Advertisement

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகமாக நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கெற்றுள்ள இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று புதிய சாம்பியனாக வலம் வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கெற்றவாரு தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற அணிகள் அபாரமான வெற்றியைப் பெற்று அசத்தி வருகின்றன. 

இந்நிலையில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை கௌரவாமாக கருதி வெற்றிக்காக ஆக்ரோசத்துடன் மோதிக் கொள்வார்கள் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs பாகிஸ்தான்
  • இடம் - நரேந்திர மோடி மைதானம், அஹ்மதாபாத்
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0830) 

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையிலான  இந்திய அணியைப் பொறுத்த வரை 2023 ஆசிய கோப்பையில் ஏற்கனவே பாகிஸ்தானை அடித்து நொறுக்கி கோப்பையையும் வென்று தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கிறது. மேலும் நடப்பு உலகக்கோப்பை தொடரில் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து ஆஃப்கானிஸ்தானையும் வீழ்த்திய இந்தியா புள்ளி பட்டியலில் 2 வெற்றிகளுடன் 3ஆவது இடத்தில் இருக்கிறது. 

குறிப்பாக ரோஹித் சர்மா, விராட் கோலி, ராகுல் போன்ற வீரர்களால் பேட்டிங் துறையில் மிகவும் வலுவாகவும் நல்ல ஃபார்மிலும் இருக்கிறது. அத்துடன் ஷுப்மன் கில் காய்ச்சலிலிருந்து குணமடைந்து தம்முடைய கோட்டையான அஹ்மதாபாத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் விளையாடினால் இந்திய பேட்டிங் அசைக்க முடியாததாக இருக்கும் என்றே சொல்லலாம். அதே போல ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளையும் வெளிப்படுத்துகின்றனர்.

அவர்களுடன் பும்ரா, சிராஜ், ஷமி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தெறிக்க விடுவதற்கு நல்ல ஃபார்மில் தயாராக இருக்கும் நிலையில் குல்தீப் யாதவ் பாபர் அசாம், முகமத் ரிஸ்வான் போன்ற பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை தன்னுடைய மாயாஜால சுழலால் திணறடிக்க தயாராக இருக்கிறார். 

மறுபுறம் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை பொறுத்த வரை பேட்டிங்கில் முகமது ரிஸ்வான், அப்துல்லா சபிக் ஆகியோர் கடந்த போட்டியில் சதமடித்த உதவியுடன் இலங்கைக்கு எதிராக 345 ரன்களை சேசிங் செய்து உலக சாதனை படைத்தது. ஆனால் அவர்களை தவிர்த்து ஃபகர் ஸமான், இமாம்-உல்-ஹக், கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் நெதர்லாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான கடந்த 2 போட்டி வெற்றிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் சுமாரான ஃபார்மில் இருக்கின்றனர். 

மேலும் ஸ்பின்னராக ஷதாப் கான் இன்னும் முழுமையான ஃபார்முக்கு திரும்பாத நிலையில் ஷாஹீன் அஃப்ரிடி, ஹரிஷ் ரவூஃப் ஆகியோர் அச்சுறுத்தலை கொடுத்தாலும் கடந்த போட்டிகளில் ரன்களை வாரி வழங்கியது பாகிஸ்தானுக்கு பின்னடைவாக இருக்கிறது. இருப்பினும் இந்தியாவை தோற்கடிக்கும் அளவுக்கு அந்த அணியிடம் தரம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் சொந்த மண்ணில் எப்போதுமே கில்லியாக திகழும் இந்தியா வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது போல இப்போட்டியிலும் 8ஆவது முறையாக பாகிஸ்தானை உலகக் கோப்பையில் தோற்கடித்து வெற்றி பயணத்தை தொடரும் என்று உறுதியாக சொல்லலாம்.

பிட்ச் ரிப்போர்ட்

நாளைய போட்டி நடைபெறும் நரேந்திர மோடி மைதானத்தி ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அங்கு சுழற் பந்துவீச்சாளர்களும் இந்த ஆடுகளத்தில் தங்களுடைய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். எனினும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இந்த ஆடுகளத்தில் அவர்கள் செயல்பட வேண்டும். அதேபோன்று வேகப்பந்துவீச்சாளர்களும் அதிகளவு ரன்கள் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் பந்து பேட்டிற்கு நன்றாக வரும் என்பதால் நாளை ஆட்டத்தில் ரன் விருந்தை எதிர்பார்க்கலாம். இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசுவது சிறப்பாக இருக்கும். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் – 134
  • இந்தியா - 56
  • பாகிஸ்தான் - 73
  • முடிவில்லாதது - 05 

உத்தேச லெவன்

இந்தியா: ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன்/ ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர்/ முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

பாகிஸ்தான்: அப்துல்லா ஷஃபிக், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கே), முகமது ரிஸ்வான், சௌத் ஷகீல், இஃப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் – கேஎல் ராகுல், முகமது ரிஸ்வான்
  • பேட்ஸ்மேன்கள்- ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), அப்துல்லா ஷபிக்
  • ஆல்ரவுண்டர் - ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, இஃப்திகார் அகமது
  • பந்துவீச்சாளர்கள்- ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், ஹசன் அலி 

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement