ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சமபலம் வாய்ந்த இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.இதில் இந்திய அணி மட்டும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. மீதமுள்ள 3 அரையிறுதி இடத்திற்கு மற்ற அணிகள் போட்டியிட்டு வருகின்றன.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 37ஆவது லீக் போட்டியில் சமபலம் வாய்ந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளன. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியளில் முதலிரு இடங்களில் உள்ள அணிகள் நேருக்கு நேர மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா
- இடம் - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
- நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)
போட்டி முன்னோட்டம்
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய 7 ஆட்டத்திலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளது. இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, கப்மன்கில், வீராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சமி, பும்ரா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். கடந்த போட்டியில் முகமது சிராஜும் சிறப்பாக செயல்பட்டார்.
சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், ஜடேஜா உள்ளனர். இந்நிலையில் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா தொடரிலிருந்து விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவருக்கு மாற்று வீரராக பிரஷித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதானல் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்ட இந்திய அணி, வெற்றி உத்வேகத்தை தக்க வைத்து கொள்ள முயற்சிக்கும்.
மறுபக்கம் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை விளையாடிய 7 ஆட்டத்தில் 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2ஆது இடத்தில் உள்ளது. அரை இறுதியை நெருங்கிவிட்ட தென் ஆப்பிரிக்கா நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அதை உறுதி செய்துவிடும். அதிலும் முக்கிய அணிகளை துவம்சம் செய்துள்ள தென்ஆப்பிரிக்க அணி, நெதர்லாந்திடம் மட்டும் அதிர்ச்சி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த அணி பேட்டிங்கில் குயின்டான் டி காக், ஐடன் மார்க்ரம், வான்டெர் டுசன், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதில் குயின் டான் டி காக் 545 ரன்கள் குவித்து நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியளில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் ரஸ்ஸி வேண்டர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் ஆகியோரும் நடப்பு உலகக்கோப்பை தொடரில் சதங்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அணியின் பந்து வீச்சைப் பொறுத்தவரையில் மார்கோ ஜான்சென், காகிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், ஜெரால்ட் கோட்ஸி, லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் உள்ளனர். இதில் ஷம்ஸி, மகாராஜ், ஜான்சென் ஆகியோர் அடுத்தடுத்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. சம பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்ச் ரிப்போர்ட்
ஈடன் கார்டன்ஸ் பிட்ச் பொறுத்த வரை வரலாற்றில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டுக்குமே சமமாக இருந்து வருகிறது. எனவே இங்கு திறமையை வெளிப்படுத்தும் யாராக இருந்தாலும் நல்ல பலனை பெறலாம். இருப்பினும் முதலில் பேட்டிங் செய்யும் அணி சற்று சவாலை சந்திக்க கூடும். அத்துடன் இப்போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளதால் பனியின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 90
- இந்தியா - 37
- தென் ஆப்பிரிக்கா - 50
- முடிவில்லை - 03
உத்தேச லெவன்
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.
தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான்டெர் டுசென், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சென், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக், ஹென்ரிச் கிளாசென்
- பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்)
- ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சென் (துணை கேப்டன்)
- பந்துவீச்சாளர்கள் - முகமது ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா, குல்தீப் யாதவ், ஜெரால்ட் கோட்ஸி
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now