ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்து vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் போட்டியில் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும், குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லக்னோவிலுள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - நெதர்லாந்து vs இலங்கை
- இடம் - ஏக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
- நேரம் - காலை 10.30 மணி (GMT 0500)
போட்டி முன்னோட்டம்
ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியில் அபார வெற்றியைப் பெற்று நடப்பு உலகக்கோப்பை தொடரில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதுமட்டுமின்றி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் டெஸ்ட் அந்தஸ்தை கொண்டுள்ள அணியை நெதர்லாந்து வீழ்த்தி வரலாற்று சாதனையைப் படைத்து முன்னணி அணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அணியின் பேட்டிங்கில் மேக்ஸ் ஓடவுட், விக்ரம்ஜித் சிங், ஸ்காட் எட்வர்ட்ஸ், பாஸ் டி லீட், காலீன் அக்கர்மேன், தேஜா நிடமனுரு ஆகியோரும் பந்துவீச்சில் வேண்டெர் மெர்வ், லோகன் வான் பீக், ஆர்யன் தத், பால் வான் மீகெரன் ஆகியோர் இருப்பதால் நிச்சயம் நெதர்லாந்து அணியால் மேற்கொண்டு வெற்றிகளை ஈர்க்கமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி அடுத்தடுத்து மூன்று தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக நட்சத்திர வீரர்கள் வநிந்து ஹாசரங்கா, கேப்டன் தசுன் ஷனகா ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியது பார்க்கப்படுகிறது.
இருப்பினும் அனுபவம் வாய்ந்த குசால் பெரேரா, பதும் நிஷங்கா, தனஞ்செயா டி சில்வா, குசால் மெண்டிஸ் ஆகியோர் பேட்டிங்கிலும், பந்துவீச்சில் தில்ஷன் மதுசங்கா, மஹீஷ் தீக்ஷனா ஆகியோரும் இருக்கும் பட்சத்திலும் மற்ற வீரர்கள் சரிவர சோபிக்காததே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் நாளை போட்டியில் இலங்கை வெற்றிபெற்று தங்களது கணக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்ச் ரிப்போர்ட்
ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்த ஏக்னா கிரிக்கெட் மைதானம் தற்போது பேட்டர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் மற்றப்பட்டுள்ளது. இங்கு கடைசியாக இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 43.3 ஓவர்களில் 209 ரன்களுக்குள் கட்டுப்பட்டுத்தப்பட்டது. அதன்பின் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 35.2 ஓவர்களில் அந்த இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவதையே தீர்மானிக்கும் என கணிக்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் – 05
- இலங்கை - 05
- நெதர்லாந்து - 00
உத்தேச லெவன்
நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், பெஸ் டி லீடே, சிப்ராண்ட் இங்கெல்பிரெக்ட், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கே), லோகன் வான் பீக், ரீலோஃப் வான் டெர் மெர்வ், ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.
இலங்கை: பதும் நிஷங்கா, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கே), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய் டி சில்வா, துனித் வெல்லாலகே, சாமிக்க கருணாரத்னே, மகேஷ் தீக்ஷனா, லஹிரு குமார, தில்ஷன் மதுஷங்க.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள் - குசல் மெண்டிஸ் (துணை கேப்டன்), ஸ்காட் எட்வர்ட்ஸ்
- பேட்ஸ்மேன்- பாத்தும் நிஸ்ஸங்க
- ஆல்ரவுண்டர்கள் - கொலின் அக்கர்மன், பெஸ் டி லீட் (கேப்டன்), துனித் வெல்லாலகே
- பந்துவீச்சாளர்கள்- ரீலோஃப் வான் டெர் மெர்வே, பால் வான் மீகெரென், லோகன் வான் பீக், மகேஷ் தீக்ஷனா, தில்ஷான் மதுஷங்க.
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now