Advertisement

ஐசிசி உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து vs நெதர்லாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Advertisement
ஐசிசி உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து vs நெதர்லாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து vs நெதர்லாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 08, 2023 • 09:35 PM

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரானது  சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புனே, தர்மசாலா, லக்னோ உள்ளிட்ட 10 நகரங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 08, 2023 • 09:35 PM

இதில் நாளை நடைபெறவுள்ள 6ஆவது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்த்து, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நெதர்லாந்து அணி ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து vs நெதர்லாந்து
  • இடம் - ராஜிவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத் 
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)

போட்டி முன்னோட்டம்

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிரான தங்களது முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது. அதிலும் குறிப்பாக தங்களது முதல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திர ஆகியோர் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்திருந்தனர். 

அதேபோல் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் டிரெண்ட் போல்ட், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இருப்பினும் நாளைய போட்டியிலும் கேன் வில்லியம்சன் விளையாடமாட்டர் என்பதால் நியூசிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அனுபவ வீரர்கள் லோக்கி ஃபர்குசன், டிம் சௌதீ ஆகியோர் நாளைய போட்டியில் விளையாடுவார்கள் என்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.    

மறுப்பக்கம் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிரான தங்களது முதல் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் அந்த அணியின் பாஸ் டி லீட் பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் அரைசதமும் கடந்து அசத்தியது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை அள்ளியது.

அந்த அணியின் பேட்டிங்கில் விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட், தேஜா நிடமானுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ், காலின் அக்கர்மேன் ஆகியோரும், பந்துவீசில் வெஸ்லி பரேசி, லோகன் வான் பீக், பால் வான் மீக்கெரன் ஆகியோரும் அணியின் பலமாக பார்க்கப்படுகின்றனர். இதனால் நாளைய போட்டியிலும் நெதர்லாந்து அணி வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்பது உறுதி. 

மைதானம் எப்படி

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சதாகமான ஆடுகளமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த போட்டியிலும் கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 04
  • நியூசிலாந்து - 04
  • நெதர்லாந்து - 00

உத்தேச லெவன் 

நியூசிலாந்து: டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கே), கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், மேட் ஹென்றி, டிரென்ட் போல்ட்.

நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீடே, தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கே), ஷாகிப் சுல்பிகர், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - டெவோன் கான்வே (கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள்- மேக்ஸ் ஓடவுட், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - கொலின் அக்கர்மேன், மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா, பெஸ் டி லீட் (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்- டிரென்ட் போல்ட், மாட் ஹென்றி, லோகன் வான் பீக்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement