
கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை இந்தியாவில் தொடங்கவுள்ளது. இதில் குஜராத் அஹ்மதாபாத் மைதானத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடபெறும் முதல் போட்டியில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், கடந்த முறை இறுதிப்போட்டியில் பட்டத்தை கோட்டைவிட்ட நியூசிலாந்து அணியும் இந்த போட்டியில் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லர் தலைமையில் களமிறங்குகிறது. நியூசிலாந்து அணி இந்த தொடரை வெற்றியுடன் தொடங்க கனே வில்லியம்சன் தலைமையில் களமிறங்க உள்ளது. அகமதாபாத் மைதானம் 1 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் நேரில் கண்டு ரசிக்கும் தன்மை கொண்டது என்பதாலும், தொடக்கப்போட்டி என்பதால் வெளிநாட்டு ரசிகர்கள் அதிகளவில் வருகை தருவார்கள் என்பதாலும் இப்போட்டியின் மீதன எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs நியூசிலாந்து
- இடம்- நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அஹ்மதாபாத்
- நேரம் - மதியம் 2 மணி