
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்து vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்த்து ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs நெதர்லாந்து
- இடம் - ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத்
- நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)
போட்டி முன்னோட்டம்
பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் முதன்மையான பலமாக பார்க்கப்படுவது அவர்களின் வேகப்பந்து வீச்சு தான். ஷாஹின் ஷா அஃப்ரிடி, ஹாரிஷ் ராஃப், ஹசன் அலி மற்றும் உஷாமா ஷாஹீன் ஆகிய, உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணிகளை தொடர்ந்து திணறடித்து வருகின்றனர்.