Advertisement

ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 23ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து வங்கதேச அணி விளையாடவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 23, 2023 • 16:07 PM
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
Advertisement

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிவருகிறது. இதில் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 23ஆவது லீக் போட்டியில் வலிமை வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து வங்கதேச அணி விளையாடவுள்ளது.  நடப்பு உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

போட்டி தகவல்கள்

Trending


  • மோது அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம்
  • இடம் - வான்கடே மைதனாம், மும்பை
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)

போட்டி முன்னோட்டம்

டெம்பா பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இருப்பினும் நெதர்லாந்து அணிக்கெதிரான தொல்விக்கு பின் எழுந்த அந்த அணி, இங்கிலாந்துக்கு எதிராக 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்து மீண்டும் தங்கள் வலிமையை நிரூபித்துள்ளது. 

அணியின் பேட்டிங்கில் குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம், ரஸ்ஸி வேண்டர் டுசென், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லார், மார்கோ ஜான்சென் ஆகியோரும், பந்துவீச்சில் காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்ஸி, கேசவ் மகாராஜ், ஜெரால்ட் கோட்ஸி ஆகியோரும் இருப்பதால் இனிவரும் போட்டிகளிலும் அந்த அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

மறுபக்கம் வங்கதேச அணியில் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக கடந்த இரு போட்டிகளில் விளையாடாமல் இருப்பது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் நாளைய போட்டியில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

அணியின் பேட்டிங் வரிசையில் தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தாஹித் ஹிரிடோய், முஷ்பிக்கூர் ரஹிம், மஹ்மதுல்லா ஆகியோரும், பந்துவீச்சில் முஸ்தஃபிசூர் ரஹ்மான், நசும் அஹ்மத், சொரிஃபுல் இஸ்லாம், டஸ்கின் அஹ்மத் போன்ற வீரர்கள் இருப்பதால் நிச்சயம் எதிரணிக்கு சவாலளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்

மும்பை வான்கடே மைதானத்தில் இருக்கும் பிட்ச் பிளாட்டாக இருப்பதால் டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிந்து வருகிறார்கள். கிட்டத்தட்ட அதே போலவே ஒருநாள் போட்டிகளிலும் இங்கு பிளாட்டான பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த மைதானத்தின் பவுண்டரி எல்லைகளும் சிறியதாகவே உள்ளது.  

அதனால் கால சூழ்நிலையில் புரிந்து நன்கு செட்டிலாகும் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்களை அடிக்கலாம். இருப்பினும் ஆரம்பகட்ட புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. மேலும் இது பகலிரவு போட்டியாக நடைபெறுவதாலும் டாஸ் வெல்லும் கேப்டன் பந்துவீச்ச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 24
  • தென் ஆப்பிரிக்கா - 18
  • வங்கதேசம் - 06

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக், லிட்டன் தாஸ், ஹென்ரிச் கிளாசென்
  • பேட்ஸ்மேன்கள்- மஹ்முதுல்லா ரியாத், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென்
  • ஆல்-ரவுண்டர் - ஐடன் மார்க்ரம் (துணை கேப்டன்), மார்கோ ஜான்சன் (கேப்டன்), மெஹ்தி ஹசன் மிராஜ்
  • பந்துவீச்சாளர்கள்- ககிசோ ரபாடா, ஜெரால்ட் கோட்ஸி

உத்தேச லெவன்

தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், ரீஸா ஹென்ட்ரிக்ஸ், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.

வங்கதேசம்: தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், நஸ்முல் ஹுசைன் சாண்டோ (கேப்டன்), மெஹ்தி ஹசன், தௌஹீத் ஹிர்டோய், முஷ்பிகூர் ரஹீம், மஹ்முதுல்லா, நாசம் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத்.

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement