Advertisement

ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 32ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Advertisement
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ (Image Source: CricketNmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 31, 2023 • 05:12 PM

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்தை புனேவில் சந்திக்க உள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 31, 2023 • 05:12 PM

இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களில் உள்ளன. நாளை நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதிசெய்து விடும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

Trending

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து
  • இடம் - மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம், புனே
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)

போட்டி முன்னோட்டம்

டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றி, ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியளில் இரண்டம் இடத்தைப் பிடித்துள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர் என வலிமையான பேட்டிங் ஆர்டரைக் கொண்டுள்ளது அணிக்கு மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்ஸி, ஜெரால்ட் கோட்ஸி, மார்கோ ஜான்சென் என அனைவரும் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை கொடுத்துவருகின்றனர். இருப்பினும் அந்த அணி சேஸிங்கில் தொடர்ந்து தடுமாறி வருவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் நாளைய போட்டியில் சேஸிங்கிலு சிறப்பாக செயல்படும் எண்ணத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மறுபக்கம் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி தொடரின் முதல் நான்கு போட்டிகளில் அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்தாலும், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது  ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. அதிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெறும் 5 ரன்களில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. 

இருப்பினும் அணியின் பேட்டிங்கில் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டெரில் மிட்செல், கிளென் பிலீப்ஸ் ஆகியோரும், பந்துவீச்சில் மேட் ஹென்றி, டிரண்ட் போல்ட், லோக்கி ஃபர்குசன், மிட்செல் சாண்ட்னரும் இருப்பதும் அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. அவர்களுடன் ஜிம்மி நீஷம் மற்றும் கிளென் பிலீப்ஸ் இருவரும் தேவையான நேரங்களில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கியுள்ளனர். இதனால் நாளைய போட்டியில் மீண்டும் வெற்றிபாதைக்கு திரும்பும் முனைப்பில் நியூசிலாந்து அணி களமிறங்கவுள்ளது. 

பிட்ச் ரிப்போர்ட்

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம் அதிக ஸ்கோர் எடுக்கும் மைதானமாகவே உள்ளது. இங்கு எப்போது பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும்.  வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கு விக்கெட்டுகளை வீழ்த்துவதில் முன்னோக்கி இருந்திருக்கலாம் ஆனால் இன்று ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த மைதானத்தில் டாஸ் எந்த முக்கிய பங்கையும் வகிக்கவில்லை. எனவே, டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம், சேஸிங் செய்வது இந்த பிட்சில் ஈஸியாக இருக்கும்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 71
  • நியூசிலாந்து - 25
  • தென் ஆப்பிரிக்கா - 41
  • முடிவில்லை - 05

உத்தேச லெவன்

நியூசிலாந்து: டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லேதம் (கே), கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், மேட் ஹென்றி, லோக்கி ஃபெர்குசன், டிரென்ட் போல்ட்

தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், டெம்பா பவுமா (கே), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சென், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மஹராஜ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: குயின்டன் டி காக், டெவோன் கான்வே, ஹென்ரிச் கிளாசென்
  • பேட்ஸ்மேன்கள்: டேரில் மிட்செல், ஐடன் மார்க்ரம்
  • ஆல்ரவுண்டர்: மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், மார்கோ ஜான்சென்
  • பந்துவீச்சாளர்கள்: டிரென்ட் போல்ட், ககிசோ ரபாடா

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement