-mdl.jpg)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 30ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இந்நிலையில் புனேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு திமுத் கருணரத்னே - பதும் நிஷங்கா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கருணரத்னே 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் நிஷங்காவுடன் இணைந்த கேப்டன் குசால் மெண்டீஸும் சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பதும் நிஷங்கா 46 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் கேப்டன் குசால் மெண்டிஸும் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சதீரா சமரவிக்ரமா 36, சரித் அசலங்கா 22, தனஞ்செயா டி சில்வா 14 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.