
ICC Player of the Month nominations for June announced (Image Source: ICC)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் மாதந்தோறும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த ஐசிசி விருது பட்டியலில் இடம் பெறும் 3 வீரர், வீராங்கனைகளில் இருந்து தலா ஒருவர் வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்து விருது வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர்களாக நியூசிலாந்து அணியின் அறிமுக வீரர் டேவன் கான்வே, வேகப்பந்து விச்சாளர் கைல் ஜேமிசன், தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.