
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 8ஆம் தேதி முடிவடைந்தது. இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு மொத்தம் 7 பதக்கங்களை வென்றனர். இதில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார், மீராபாய் சானு மற்றும் ரவி தஹியா வெள்ளி, பிவி சிந்து, பஜ்ரங் புனியா, லவ்லினா மற்றும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
இதற்கிடையில் சில காலமாக ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட்டையும் சேர்க்க வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் அடிக்கடி கூறி வருகின்றனர். இந்நிலையில், அடுத்த ஒலிம்பிக் போட்டி 2024-ல் பிரான்ஸ் தலைநகா் பாரீஸிலும், 2028 ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டை சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஐசிசி அறிவித்துள்ளது.