
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையிலும் சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான புதுபிக்கபட்ட தரவரிசை தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைக் தக்கவைத்துள்ளது.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் அப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஐசிசி தொடர்களில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று தங்கள் மீதான விமர்சனங்களுக்கும் பதிலடியைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்திய டெஸ்ட் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் தென் அப்பிரிகாவிடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்துள்ள நிலையிலும், ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தைத் தக்கவைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 123 மதிப்பீட்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.