
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதிப்பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள இரு அணிகளைத் தேர்வு செய்ய குவாலிஃபையர் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இலங்கை மற்று ஸ்காட்லாந்து அணிகள் முன்னேறியதன் மூலம், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளன.
இந்நிலையில் வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்த நிலையில் அங்கு ஆட்சி மாற்றமும் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக திட்டமிட்டபடி ஐசிசி மகளிர் டி20 உலாகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபரில் அங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒருமாதம் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில் அதற்குள் நிலைமை கட்டுக்குள் வருமா என்பதும் கேள்விகுறியாகவே உள்ளது.
மேற்கொண்டு தொடரை அங்கு நடத்த முடியாத நிலையில் ஐசிசி வேறுநாட்டு தொடரை மாற்றுவது குறித்த ஆலோசனையில் இறங்கியது. மேலும் இத்தொடர் வேறுநாட்டுக்கு மாற்றும் நிலை ஏற்பட்டால், அதனை இந்தியா, இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்தும் திட்டம் இல்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிசெய்திருந்தார்.