
ஏழாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் ‘டாப்-8’ இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக ‘சூப்பர்-12’ சுற்றில் களம் இறங்குகின்றன. சூப்பர்-12 சுற்றில் விளையாட இருக்கும் அணிகள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்கு பயிற்சி ஆட்டங்களில் ஆடுகின்றன.
துபாயில் இன்று மாலை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடிய லோகேஷ் ராகுல், இஷான் கிஷன் அரைசதம் விளாசி அசத்தினர். விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் சோபிக்கவில்லை. பந்து வீச்சில் முகமது ஷமி 3 விக்கெட்டும், பும்ரா, ராகுல் சாஹர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.