Advertisement

டி20 உலகக் கோப்பையை நடத்த ஆர்வம் காட்டும் ஓமன்!

நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரை நடத்த ஓமன் கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது

Bharathi Kannan
By Bharathi Kannan June 05, 2021 • 21:02 PM
icc-t20-world-cup-oman-ready-to-host-t20-world-cup-if-given-opportunity
icc-t20-world-cup-oman-ready-to-host-t20-world-cup-if-given-opportunity (Image Source: Google)
Advertisement

நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கரோனா தொற்று பரவல் காரணமாக உலகக்கோப்பை தொடரை நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை நடத்துவது குறித்து ஜூன் 28ஆம் தேதிக்குள் பிசிசிஐ பதிலளிக்குமாறு ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

Trending


ஒருவேளை இந்தியாவில் டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடத்த முடியாத சூழலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரை தங்கள் நாட்டில் நடத்த விருப்பம் உள்ளது ஓமன் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ மற்றும் ஐசிசியிடம் விருப்பம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து ஓமன் கிரிக்கெட் வாரியம் கூறுகையில், எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் டி20 உலக கோப்பை தொடரை தங்கள் நாட்டில் நடத்த விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement