
ICC Test Player Rankings: Ravichandran Ashwin Remains In Second Position (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதம் தோறும் ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 5ஆவது இடத்திலும், ரிஷப் பந்த 6ஆவது இடத்தையும், ரோஹித் சர்மா 8ஆவது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர்.
அதேசமயம் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். மேலும் பாகிஸ்தான் அணியின் ஹசன் அலி 14 வது இடத்தையும், ஷாஹீன் அஃப்ரிடி 22ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.