டெஸ்ட் தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறியது ஆஸி; இந்தியாவுக்கு பின்னடைவு!
ஆஷஸ் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது.

ICC Test Rankings: Australia top ranked side, India drops to third (Image Source: Google)
சமீபத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை 4-0 என வென்றது ஆஸ்திரேலியா. இதையடுத்து தரவரிசையில் இந்தியா, நியூசிலாந்து அணிகளைப் பின்னுக்குத் தள்ளி நம்பர் ஒன் இடத்துக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறியுள்ளது.
அந்த அணியின் புதிய கேப்டன் பேட் கம்மின்ஸ் இதன்மூலம் மிகச்சிறப்பான முறையில் தன்னுடைய புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
Trending
முன்னதாக நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருந்த இந்தியா, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்ததாலும், ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை வென்றதாலும் தரவரிசையில் 3ஆம் இடத்துக்கு இறங்கியுள்ளது.
அதேசமயம் கேன் வில்லியம் சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 2ஆஅம் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News