
ICC Test Rankings: Babar rises to seventh, Pant drops one slot (Image Source: Google)
பாகிஸ்தான் -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. இதில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரை சமன்செய்தது.
இன்றுடன் இத்தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதன் பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி 18ஆவது இடத்தில் இருந்து 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடங்களில் பாபர் அசாம் எட்டாவது இடத்தில் இருந்து 7ஆவது இடத்திற்கும், ரிஷாப் பண்ட் ஏழாவது இடத்திலிருந்து 8ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.