
ICC Test Rankings: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடிய தென் ஆப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துள்ளனர்.
நடந்து முடிந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி தங்களுடைய கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக ஐசிசி தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றும் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்திலும், ஹாரி புரூக் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மூன்றாம் இடத்திலும், இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4ஆம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 5அம் இடத்திலும் தொடர்கின்றனர்.