
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த இந்திய அணி தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியது. அதன்படி இன்று நடைபெறற சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்த்து கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு அதார்ஷ் சிங் - அர்ஷின் குல்கர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அர்ஷிங் குல்கர்னி 9 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் அதார்ஷ் சிங்குடன் இணைந்த நட்சத்திர வீரர் முஷீர் கான் வழக்கம்போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் இருந்த அதார்ஷ் சிங் அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
இப்போட்டியில் இருவரும் இணைந்து 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஆதார்ஷ் சிங் 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் அதிரடியாக விளையாடி வந்த முஷீர் கானும் தனது அரைசதத்தைக் கடந்தார். அதன்பின் அவருக்கு துணையாக விளையாடி வந்த கேப்டன் உதய் சஹாரன் 34 ரன்களையு, ஆரவெல்லி அவனிஷ் 17 ரன்களிலும், பிரியான்ஷு மொலியா 10 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.