
ICC Women's World Cup 2022 - India Post 317/8 Against West Indies (Image Source: Google)
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. ஹாமில்டனில் இன்று நடைபெற்று வரும் 10ஆவது லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாஃபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸுடன் விளையாடி வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அபாரமாக விளையாடி சதமடித்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த மந்தனா 119 பந்துகளில் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.