
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நேற்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 12ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 3ஆவது வெற்றியை பதிவு செய்தது. அஹ்மதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக நட்சத்திர வீரர்களான கேப்டன் பாபர் அசாம் 50, முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக பாண்டியா, ஜடேஜா, பும்ரா, குல்தீப் யாதவ், சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 191 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக 86 ரண்களும் 53 ரன்களும் எடுத்து 117 ரன்கள் மீதம் வைத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற்ற பொழுது அஹ்மதாபாத் மைதானத்தில் இந்திய ரசிகர்களில் சிலர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டது காணொளியாக வெளிவந்தது. முகமது ரிஸ்வான் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பும் பொழுது அந்தப் பக்கத்தில் இருந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவரைப் பார்த்து மதக்கோஷத்தை எழுப்பியது சமூக வலைதளங்களில் பரவலாகியது.