
டெஸ்ட் கிரிக்கெட்டைக் காப்பாற்றும் பொருட்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நான்கு வருடங்களுக்கு முன்பு கொண்டு வந்தது. ஒவ்வொரு இரண்டு வருடத்திலும் வெற்றி பெறும் சதவீதத்தின் அடிப்படையில், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகின்றன.
இந்த இறுதிப் போட்டியில் வெல்லும் மணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வழங்கப்படுகிறது. ஒருவேளை போட்டி டிராவில் முடிந்தால் இரண்டு அணிகளுக்கும் பட்டம் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. மேலும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ஒருநாள் ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டும் இருக்கிறது.
முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் தகுதிப்பெற்றன. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி வென்று முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றியது. இதற்கடுத்து இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஓட்டத்தில் இறுதிப் போட்டிக்கான தகுதியை இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் பெற்றுள்ளன.