
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு இந்த முறை கேப்டன் ஷிகர் தவான் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும் கடந்த ஆட்டத்தைப் போலவே பிரப் சிம்ரன் ரன்கள் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
பஞ்சாப் அணியில் சிக்கந்தர் ராஸாவுக்கு பதில் இடம்பெற்ற மேத்யூ ஷார்ட் மட்டுமே கொஞ்சம் அதிரடியாக விளையாடி 36 ரன்கள் எடுத்தார். கடைசியாக வந்த ஷாருக்கான் 9 பந்துகளில் 21 ரன் எடுத்த காரணத்தால், 20 ஓவர்களில் பஞ்சாப் அணியால் 153 ரன்கள் எடுக்க முடிந்தது. இல்லையென்றால் இந்த ரன்களே வந்திருக்காது.
அதே சமயத்தில் குறைந்த இலக்கை நிர்ணயித்திருந்தாலும் ஆட்டத்தை கடைசி பந்துக்கு முன் பந்து வரை கொண்டு சென்றார்கள் பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்கள். வெற்றிக்கும் வாய்ப்பு இருந்த நிலையில் கடைசி பந்துக்கு முன் பந்தில் நான்கு ரன்கள் தேவையாக இருந்த நிலையில் திவாட்டியா பவுண்டரி அடிக்க குஜராத் வெற்றி பெற்றது.