
If England players stand together, they will play rescheduled IPL: Pietersen (Image Source: Google)
கரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், வீரர்கள் பலர் பயோ-பபுளையும் மீறி தொற்றுக்கு ஆளானதாலும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பினர்.
ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரை இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ ஏற்பாடு செய்து வருகிறது. ஒருவேளை வெளிநாட்டில் நடத்தினால், வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவார்களா என்பது தெரியவில்லை.
ஐபிஎல் தொடரில் விளையாடும் பாதி வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள். குறிப்பாக மோர்கன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ போன்றோர் இங்கிலாந்து அணியில் தேசிய அணிக்காக விளையாட உள்ளனர். இதனால் ஐபிஎல் மீண்டும் நடத்தப்பட்டால் அவர்கள் பங்கேற்பார்களா என்பது சந்தேகம்தான்.