தோனி இம்பேக்ட் பிளேயராக விளையாட மாட்டார் - வீரேந்திர சேவாக்!
மகேந்திர சிங் தோனி கேப்டனாக இல்லாவிட்டால் அவர் இம்பேக்ட் பிளேயராக வரவே மாட்டார் என முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிப்போட்டிக்காக காத்திருக்கிறது. ஏனெனில் நேற்று நடைபெறுவதாக இருந்த இந்த இறுதிப்போட்டி தொடர் மழை காரணமாக கைவிடப்பட்டு, ரிசர்வ் டேவான இன்றைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இறுடிப்போட்டியில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதேசமயம் இன்றைய ஆட்டமும் மழை காரணமாக கைவிடப்பட்டால், லீக் தொடரில் அபாரமாக செயல்பட்டு புள்ளிப்பட்டியளில் முதலிடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். இந்நிலையில் அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடுவாரா என்ற சந்தேகங்கள் வழுத்து வருகின்றன.
Trending
மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் இன்னும் தொடர்ந்து விளையாட இம்பேக்ட் பிளேயர் விதியால் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்று ஷேன் வாட்சன் வரை நிறைய பேர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ம்பேக்ட் பிளேயர் விதியால் அம்பதி ராயுடு தற்போது ஒரு முழு சீசனை விளையாடி தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு பக்கத்தில் மூத்த சுழற் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா லக்னோ அணிக்காக இம்பேக்ட் பிளேயராக சிறப்பான முறையில் பந்துவீசி இருக்கிறார்.இப்படி மூத்த வீரர்கள் இம்பேக்ட் பிளேயர் விதியைப் பயன்படுத்தி தங்கள் வேலையை மட்டும் செய்து, மீதி பாதி ஆட்டத்தில் வெளியே இருந்து ஓய்வு எடுத்து கொள்கிறார்கள். இந்த விதியை பயன்படுத்தி மகேந்திர சிங் தோனியும் இப்படி இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் வீரேந்திர சேவாக் இதை மறுத்து அதற்கான காரணங்களைத் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர்,“உடல் தகுதியுடன் இருந்தால் 40 வயதில் விளையாடுவது கடினமான ஒன்று கிடையாது. தோனி இந்த ஆண்டு அதிகம் பேட்டிங் செய்யவில்லை. அவர் கடைசி இரண்டு ஓவர்களுக்கு மட்டுமே வந்து, தனது முழங்கால் காயத்தைப் பெரிதாக மாற்றிக் கொள்ளவில்லை. அவர் இந்த சீசனில் 40 இல்லை 50 பந்துகள் மட்டுமே சந்தித்து இருப்பார் என்று நினைக்கிறேன்.
தோனிக்கு இம்பாக்ட் பிளேயர் விதி பொருந்தாது. ஏனென்றால் அவர் கேப்டன்சிக்காக மட்டுமே விளையாடுகிறார். அவர் கேப்டனாக களத்தில் இருந்தே ஆக வேண்டும். ம்பாக்ட் பிளேயர் விதி ஒரு பேட்ஸ்மேன், ஒரு பந்துவீச்சாளர் தங்கள் வேலையை செய்து விட்டு வெளியில் இருப்பதற்குதான் உதவியாக இருக்கும். கேப்டனாக இருப்பதற்கு உதவாது.
மகேந்திர சிங் தோனி கேப்டனாக இல்லாவிட்டால் அவர் இம்பேக்ட் பிளேயராக வரவே மாட்டார். பிறகு அவரை சிஎஸ்கே அணியின் மென்டராகவோ, பயிற்சியாளராகவோ, அல்லது இயக்குனராகவோதான் பார்க்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now