
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியையும் பதிவுசெய்துள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் பெரிதளவில் சோபிக்காததால் 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இலங்கை அணி 25.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ள தங்களுடைய அணி அடுத்த 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றால் அரையிறுதிக்கு சென்று விடுவோம் என்று இலங்கை கேப்டன் குஷால் மண்டிஸ் உற்சாகத்துடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் மேத்யூஸ் அணிக்கு திரும்பி அசத்தியுள்ளது வலுவை சேர்ப்பதாக தெரிவித்துள்ளார்.