Advertisement

ஐஎல்டி20 2024: துபாய் கேப்பிட்டல்ஸை பந்தாடி ஷார்ஜா வாரியர்ஸ் அபார வெற்றி!

துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 29, 2024 • 23:08 PM
ஐஎல்டி20 2024: துபாய் கேப்பிட்டல்ஸை பந்தாடி ஷார்ஜா வாரியர்ஸ் அபார வெற்றி!
ஐஎல்டி20 2024: துபாய் கேப்பிட்டல்ஸை பந்தாடி ஷார்ஜா வாரியர்ஸ் அபார வெற்றி! (Image Source: Google)
Advertisement

ஐஎல்டி20 லீக் தொடரின் 2ஆவது வீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் - ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு டேவிட் வார்னர் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குர்பாஸ் 9 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த பென் டங்கும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார்.

Trending


இதனைத் தொடர்ந்து களமிறங்கியவர்களில் சிக்கந்தர் ரஸா ஓரளவு தாக்குப்பிடித்து விளையாட, மறுபக்கம் சாம் பில்லிங்ஸ் 9 ரன்களுக்கும், மேக்ஸ் ஹோல்டன் ரன்கள் ஏதுமின்றியும், ரோவ்மன் பாவெல் 10 ரன்களுக்கும், ஜேசன் ஹோல்டர் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து மஹீஷ் தீக்‌ஷனா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் 22 ரன்களில் சிக்கந்தர் ரஸா ஆட்டமிழக்க, வேண்டர் மோர்வ் 21 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷார்ஜா வாரியர்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மஹீஷ் தீக்‌ஷனா 4 விக்கெட்டுகளையும், டேனியல் சம்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு நிரோஷன் டிக்வெல்லா - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 37 ரன்களை எடுத்திருந்த நிரோஷன் டிக்வெல்லா விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் சார்லஸுடன் இணைந்த ஜோ டென்லியும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஆட்டமிழக்காமல் இருந்த ஜான்சன் சார்லஸ் 43 ரன்களையும், ஜோ டென்லி 23 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 13.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த மஹீஷ் தீக்‌ஷனா ஆட்டநாயகன் விருதை வென்றார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement