Advertisement

ஐஎல்டி20 2024: அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடி அரைசதம்; துபாய் கேப்பிட்டல்ஸுக்கு 172 ரன்கள் இலக்கு!

துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
ஐஎல்டி20 2024: அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடி அரைசதம்; துபாய் கேப்பிட்டல்ஸுக்கு 172 ரன்கள் இலக்கு!
ஐஎல்டி20 2024: அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடி அரைசதம்; துபாய் கேப்பிட்டல்ஸுக்கு 172 ரன்கள் இலக்கு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 09, 2024 • 09:47 PM

ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் - துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 09, 2024 • 09:47 PM

இதையடுத்து களமிறங்கிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு பிலிப் சால்ட் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொண்டுத்தனர். அதன்பின் பிலிப் சால்ட் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 26 ரன்கள் எடுத்த நிலையில் பிலிப் சால்ட் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டேனியல் லாரன்ஸ் 15 ரன்களிலும், கேப்டன் காலின் முன்ரோ 6 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

Trending

இதற்கிடையில் அதிரடியாக விளையாடி வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் அரைசதம் கடந்ததுடன் 4 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 66 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த ஆடம் ஹோஸ் 7 ரன்களுக்கும், சாம் கரன் 17 ரன்களுக்கும், மைக்கேல் ஜோன்ஸ் 20 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க டெஸர்ட் வைப்பர்ஸ் அணி தடுமாறியது. 

அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற 20 ஓவர்கள் முடிவில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்தது. துபாய் கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் ஒல்லி ஸ்டோன் மற்றும் வேண்டர் மெர்வ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி விளையாடவுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement