ஐஎல்டி20 2024: எமிரேட்ஸ் அணிக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜெயண்ட்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் - ஜோர்டன் காக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய ஜேம்ஸ் வின்ஸ் ஒரு முனையில் பவுண்டரிகளாக விளாச, மறுபக்கம் ஜோர்டன் காக்ஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிறிஸ் லின் 16 ரன்களுக்கும், ஷிம்ரான் ஹெட்மையர் 2 ரன்களுக்கும், ஜெரால்ட் எராஸ்மஸ் 7 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
Trending
அதேசமாயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசத கடந்திருந்த கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய ஜேமி ஸ்மித் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினாலும், மறுமுனையில் களமிறங்கிய ஜேமி ஓவர்டன், டோமினிக் டிரேக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொறப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேமிஸ் ஸ்மித் 26 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் 43 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வக்கார் சலாம்கெயில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
Win Big, Make Your Cricket Tales Now