Advertisement

ஐஎல்டி20 2024: கிறிஸ் லின் அரைசதம்; டெஸர்ட் வைப்பர்ஸுக்கு 161 டார்கெட்!

டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 24, 2024 • 21:45 PM
ஐஎல்டி20 2024:  கிறிஸ் லின் அரைசதம்; டெஸர்ட் வைப்பர்ஸுக்கு 161 டார்கெட்!
ஐஎல்டி20 2024: கிறிஸ் லின் அரைசதம்; டெஸர்ட் வைப்பர்ஸுக்கு 161 டார்கெட்! (Image Source: Google)
Advertisement

இன்டர்நேஷனல் லீக் டி20 என அழைக்கப்படும் ஐஎல்டி20 தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற  7ஆவது லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஜேமி ஸ்மித் - கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜேம்ஸ் வின்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஜேமி ஸ்மித்தும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த கிறிஸ் லின் - ஜோர்டன் காக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

Trending


இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிறிஸ் லின் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 63 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் லின் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோர்டன் காக்ஸும் 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் 11 ரன்களுக்கும், கிறிஸ் ஜோர்டன் 14 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

இறுதியில் உஸ்மான் கான் தனது பங்கிற்கு 16 ரன்களையும், டோமினிக் டார்க்ஸ் 7 ரன்களையும் சேர்த்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களைச் சேர்த்தது. டெஸர்ட் வைப்பர்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இழக்குடன் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி விளையாடவுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement