
ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் நேற்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய ஆடம் லித் ஒரு ரன்னிலும், ரெஹான் அஹ்மத் 4 ரன்னிலும், ஜோர்டன் காக்ஸ் ஒரு ரன்னிலும், ஒல்லி ராபின்சன் ரன்கள் ஏதுமின்றியும், ஷிம்ரான் ஹெட்மையர், மார்க் அதிர், அயான் கான் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். ஒருபக்கம் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்து வந்த நிலையில் மறுபக்கம் சிறப்பாக விளையாடிய ஜேம்ஸ் வின்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அதுமட்டுமின்றி இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேம்ஸ் வின்ஸ் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 76 ரன்களைச் சேர்த்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை மட்டுமே சேர்த்தது. வைப்பர்ஸ் தரப்பில் லோக்கி ஃபெர்குசன் 3 விக்கெட்டுகளையும், முகமது அமீர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய வைப்பர்ஸ் அணியில் ஃபகர் ஸமான் 7 ரன்களுக்கும், டேனியல் லாரன்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர்.