
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐஎல்டி20 லீக் தொடரின் முதல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 30ஆவது லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் - ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் குர்பாஸ் 7 ரன்களிலும், கேப்டன் மொயீன் அலியும் ஒரு ரன்னிலும், லூயிஸ் 3 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய கொஹ்லர் காட்மோரும் 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்,
இதனால் 18.3 ஓவர்களில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கலுக்கு ஆல் அவுட்டானது. கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் டேவிட் வைஸ் 5 விக்கெட்டுகளையும், பிராத்வைட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.