
ஐஎல்டி20 லீக் சீசனின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இத்தொடரில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை வென்ற கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த வைப்பர்ஸ் அணிக்கு ஃபகர் ஸமான் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 14 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து நிதானமாக விளையாடி வந்த அலெக்ஸ் ஹேல்ஸும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய நட்சத்திர வீரர் சாம் கரணும் 3 ரன்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத் தொடர்ந்து அஸாம் கான் 10 ரன்களிலும், டேனியல் லாரன்ஸ் 24 ரன்களிலும் என சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 27 ரன்களையும், வநிந்து ஹசரங்கா 13 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனல் டெஸார்ட் வைப்பர்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. துபாய் கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் துஷ்மந்தா சமீரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் காளமிறங்கிய கேப்பிட்டல்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் ஷாய் ஹோப், கலித் ஷா, பென் டங்க் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.