
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கப்பட்டுள்ள ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் - எம்ஐ எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய முகமது வாசீம், அரவிந்த், ஆண்ட்ரே ஃபிளெட்சர் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரன் - கீரென் பொல்லார்ட் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின்னர் 57 ரன்கள் எடுத்திருந்த நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 39 பந்துகளில் 6 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 67 ரன்களைச் சேர்த்தார் பொல்லார்ட். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் எம்ஐ எமீரேட்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களைச் சேர்த்தது.